தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் 27 தேர்வு மையங்கலில் தேர்வுநடைபெற்றது

by Staff / 19-11-2022 04:05:32pm
தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் 27 தேர்வு  மையங்கலில் தேர்வுநடைபெற்றது

தமிழகத்தில் உள்ள உயர் பதவிகளான துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப் 1 தேர்வானது, இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், தமிழக முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்து தேர்வை எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் 27 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தேர்வானது காலை 9 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம், தென்காசி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தினை டிஎன்பிஎஸ்சி போர்டு உறுப்பினரான ஏ.வி.பாலுசாமி என்பவர் பார்வையிட வந்தார். அவருடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் குரூப் 1 தேர்விற்காக விண்ணப்பம் செய்த 7,262 பேரில் 4,453 பேர் வருகை தந்திருப்பதாகவும், 2809 பேர் தேர்விற்கு வருகை தரவில்லை எனவும், சுமார் 63% பேர் தான் தற்போது குரூப் 1 முதல் நிலை தேர்வினை எழுதி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

மேலும், தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எளிதாக செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகள் போக்குவரத்து துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும், தேர்வு மையங்களில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இரண்டு துணை ஆட்சியர்கள் தலைமையில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி உறுப்பினரான ஏ.வி.பாலுசாமி என்பவர் அளித்த பேட்டியின் போது, டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், டிஎன்பிஎஸ்சி தேர்வானது வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதாகவும், பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு தேர்வான சிறப்பான முறையில் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போது நடைபெறும் குரூப் 1 முதல் நிலை தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், அது குறித்து டிஎன்பிஎஸ்சி சேர்மன் முறையான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories