இ.பி.எஸ் இடைக்காலப் பொதுச்செயலாளராகத்தேர்வு செய்யப்பட்டது செல்லும்

by Admin / 02-09-2022 11:07:19am
 இ.பி.எஸ் இடைக்காலப் பொதுச்செயலாளராகத்தேர்வு  செய்யப்பட்டது  செல்லும்


அ.தி.மு.க பொதுக்குழுக்கூட்டியது  செல்லாது என்ற தனிநீதிபதி ஜெயசந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுசென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச்.ஜீலை 11 ஆம் தேதி  கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் இ.பி.எஸ்இடைக்காலப் பொதுச்செயலாளராகத்தேர்வு  செய்யப்பட்டது  செல்லும்  என்றும்  சென்னை உயர்நிதிமன்ற நீதிபதிகள் சுந்தர்மோகன் ,துரைசாமி  அமர்வு  தீர்ப்பு வழங்கியது .கட்சியின் சட்ட விதிகள்படியே பொதுக்குழு  கூட்டப்பட்டது  என்ற வாதம்  ஏற்கப்பட்டதாகவும்   ஒற்றைத் தலைமையை நீதி மன்றம்  ஏற்றுக்கொண்டதாக  இ.பி.எஸ் தரப்பு  வழக்கறிஞர்  தெரிவித்தார். தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டதால்  ஒ.பி.எஸ்  தரப்பு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று  தெரிகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு  ஆதரவாக  தீர்ப்பு  வந்ததால் அ.தி.மு.க எடப்பாடி அணி உற்சாகமடைந்துள்ளனர்

 

Tags :

Share via

More stories