திமுக மாவட்ட ஊராட்சி தலைவரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.

by Editor / 02-09-2022 04:00:58pm
திமுக மாவட்ட ஊராட்சி தலைவரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.

தென்காசி மாவட்ட ஊராட்சி குழுவின் கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிகளின் துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் மற்றும் 11 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர், கூட்டம் தொடங்கியதும் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின்படி மாநில நிதிக்குழு நிதி 2 கோடியே ஐம்பத்தி ஒன்பது லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிகளும், 15 வது நிதிக்குழு  நிதி ஒதுக்கீடு குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கு 2 கோடியே 84 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாயும் என மொத்தம்  சுமார் ஐந்தரை கோடி ரூபாய்க்கு வளர்ச்சிப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த நிதி ஒதுக்கீட்டில்  ஆலங்குளம் பகுதிகளுக்கு மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் பிற மாவட்ட கவுன்சிலர் பகுதிகளுக்கு அதில் ஒதுக்கீடு செய்யாமல் பாரபட்சம் காட்டுவதாகவும் இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தற்பொழுது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை ரத்து செய்து புதிய பணிகளை சமமாக பிரித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட உறுப்பினர்கள் சாக்ரட்டிஸ், கனிமொழி,மதிமாரிமுத்து,உள்ளிட்ட  பலரும் வலியுறுத்தி பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி தீர்மானங்களை நிறைவேற்றி விடுவோம்,அடுத்த முறை பாரபட்சமின்றி சமமான முறையில் அனைவருக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்காத பெரும்பான்மையான திமுக கவுன்சிலர்கள் தங்களது இருக்கைகளை விட்டு வெளியேறிச் சென்றனர்.இந்த நிலையில் திமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜ தலைவர் என்பவர் வெளிநடப்பு செய்தவர்களிடம் திமுகவை சேர்ந்த நாமே வெக்கிநாடாப்பு செய்தால் நன்றாக இருக்காது எனக்கூறி அனைவரையும் சாமாதானம் செய்தும் வெளிநடப்பு செய்தவர்கள் குட்ட அரங்கத்திற்கு வராததால் அவர் கோபத்தில் புறப்பாட்டு சென்றார்.திமுக மாவட்ட ஊராட்சி தலைவரின் செயல்பாடுகளைக் கண்டித்து மாவட்ட திமுக ஊராட்சி உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்த சம்பவம்  தென்காசி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via