25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி

by Staff / 01-03-2025 01:56:09pm
25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே 25 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஏழரைப்பட்டி என்னும் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அன்வர் கான் உயிரிழந்தார். தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via