ஆளுநர் கார் மீது கல்லை வீசி தாக்குதல் தலைவர்கள் கண்டனம்
தமிழகத்திலேயே தமிழக ஆளுநருக்கு இல்லாத சூழல் உள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு முறையான, முழுமையான பாதுகாப்பு வழங்கப்படாததற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும்.தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாடு ஆளுனர் ரவி மயிலாடுதுறையில் ஆதீனத்தை சந்திக்க வந்தார். அவர் ஞானம் யாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். அதன் துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்த ஆளுநருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த 3 நாட்களாக காவல்துறைக்கு, அரசுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை என்ன விதமான அசம்பாவிதம் நடக்க கூடாது என்று நினைத்தோமோ அந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
திமுக தொண்டர்கள், அந்த பகுதி தலைவர்கள், அவரின் கூட்டணி கட்சியினர்.. ஆளுநரின் கார் மீது கல்லை வீசி உள்ளனர். கொடி கம்பத்தை வீசி தாக்கி உள்ளனர். இதை எல்லாம் பார்க்கும் போது ஒரு கவர்னருக்கே மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் பொது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். எப்போது ஒரு மாநில முதல்வர் கண்ணை கட்டிக்கொண்டு, தனது கட்சியின் சித்தாந்தத்திற்காக இந்தியா அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளவர்களை எதிர்த்து வருகிறார்.என தமிழக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Tags :