திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: இபிஎஸ்

by Staff / 18-03-2024 12:04:20pm
திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: இபிஎஸ்

இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத திமுக-வுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா என்பதுபோல், கடந்த மூன்றாண்டு கால மக்கள் விரோத விடியா திமுக அரசின் அவலங்களை எடுத்துச் சொன்னால், நானே முதல்வன் - நான் ஆளும் மாநிலமே நாட்டில் முதன்மை மாநிலம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் புலம்பி வருகிறார்.சிறந்த ஆட்சியாளர்கள் என்றால், தாங்கள் செய்த சாதனைகளையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த அரசுகள் செய்யும் சாதனைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பது ஏற்கக்கூடிய ஒன்றாகும். மக்களின் விதிப் பயனால் நமக்கு கிடைத்துள்ள முதல்வர் போதைப் பொருள் புழக்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் குஜராத்தோடும், அஸ்ஸாமோடும், மற்ற வட மாநிலங்களோடும் தமிழகத்தை ஒப்பிட்டுத் தனக்குத்தானே ஒரு பொய்மைத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்.

 

Tags :

Share via