2026 சட்டமன்றத்தேர்தல் காய்நகர்த்த தொடங்கியது தமிழக வெற்றிக் கழகம்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியலில் சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என்ற கணக்கில் புதிய செயலாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. தவெக-வில் ஏற்கனவே ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு ஒன்றிய செயலாளர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து மக்கள் சந்திப்பு குறித்த ஆலோசனைகளும் தவெக-வில் நடந்து வருகிறது.இந்த நிலையில் மக்களை சந்திக்க விரைவில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பயணம் தொடங்கவுள்ள நிலையில் 2026 சட்டமன்றத்தேர்தலை கணக்கில்கொண்டு காய்களை நகர்த்த தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியுள்ளது.
Tags : 2026 சட்டமன்றத்தேர்தல் காய்நகர்த்த தொடங்கியது தமிழக வெற்றிக் கழகம்.