4 மாவட்டங்களில் மிக கனமழை, 9 மாவட்டங்களில் கனமழை

by Staff / 30-11-2023 01:14:40pm
4 மாவட்டங்களில் மிக கனமழை, 9 மாவட்டங்களில் கனமழை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தெற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் வரும் 3ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதே போல் கடலோர மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்காலின் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via

More stories