பத்திரிக்கையாளர் சுதந்திரத்தை இறுக்கும் திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குநர்

திருச்சி மாநகர், ஈபி சாலையில் அமைந்துள்ள அரசு வைகவுண்டஸ் கோஷன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 6 வகுப்பறை கொண்ட புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். காலை 10 மணி அளவில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது இதனால் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் அமர வைத்திருந்தனர்.
ஆனால் முதல்வர் காணொளி காட்சி மூலமாக இந்த பள்ளி கட்டிடத்தை திறக்க இரண்டரை மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டதால் மாணவிகள் அனைவரும் சோர்ந்து நிலையில் அமர்ந்திருந்தனர்.
சற்று நேரத்துக்கு முன்பாக காணொளி காட்சி மூலமாக தமிழ்நாடு முதல் மு க ஸ்டாலின் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சமூக வலைதளமான DIPR- ல் இந்த நிகழ்வை நேரலை காட்சியாக வழங்கினார். அப்போது நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகு , நிகழ்ச்சியை ஒளிபரப்பட்ட தொலைக்காட்சியில் அதிமுக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் தமிழக எதிர் கட்சி சட்டமன்ற தலைவர் எடப்பாடி. பழனிச்சாமி ஆகியோர் புகைப்படம் வந்ததால் அதிகாரிகள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திருச்சி மாவட்ட ஆட்சியர் நிருபர்கள் இருக்கக்கூடிய குழுவில் இருந்து தமிழ் ஜனம் செய்தியாளர் தீபன் என்பவரை, செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம் குழுவில் இருந்து நீக்கினார். தொடர்பாக அவரை தொடர்பு கொண்டபோது தொலைபேசியை துண்டித்து விட்டார். என செய்தியாளர்கள் தகவல்
Tags :