கமல்ஹாசனின் புதிய படம் மணிரத்னம் இயக்குகிறார்.
கமல்ஹாசனின் விக்ரம் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டதால்,ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் கமல் நடித்து வந்தார்.கிரேன் விபத்தில்ஊழியர் உயிரிழந்ததை அடுத்து படம் கிட்டதட்ட கைவிடப்படடு..கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி பலரை மீண்டும் கமல் பக்கம் திருப்பியது.இந்தியன் -2 படப்பிடிப்பு மும்முரமாக நடந்து படம் முடிந்தநிலையில்..அவரின் பிக்பாஸ்-6 ,தமிழகஅரசின் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தமிழர் வரலாற்றை குரல் வழி பதிவு பண்ணியது.அடுத்து பொன்னியின் செல்வன் படத்திற்கும் குரல் கொடுத்தது இதெல்லாம் துவண்டிருந்த கமலை உற்சாகப்படுத்த....பொன்னியின் செல்வன் பட வெற்றி மணிரத்தினத்தை மீண்டும் நாயகனுக்குப் பின்பு கமலின் 234 வது படத்தை 35 வருடம் கழித்து மீண்டும் இயக்க வைத்திருக்கிறது.கமல்-மணிரத்னம் கூட்டணியில் படம் வர இருப்பதை தம் 68 வது பிறந்த நாளில் அறிவித்து விட்டார்.
கமலை தொடர்ந்து மணி ரத்னம் ரஜினியை வைத்தும் ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல்.அதன் அறிவிப்பு ரஜினியின்பிறந்த நாளில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.மணிரத்னம்-ரஜினி கூட்டணி தளபதிக்குப் பிறகு மீண்டும் இணையஉள்ளது.ரஜினி தற்பொழுது நெல்சன் தீலிப்குமார் இயகத்தில் ெஜயிலர் படத்திலும் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில்லால் சலாம் படத்திலும் நடித்து வருகிறார்
Tags :