தேர்தல் நடைமுறை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து அரசியல் கட்சி விளம்பரங்கள் புகைப்படங்களை அழிக்கும் பணி தீவிரம். 

by Editor / 17-03-2024 04:20:57pm
தேர்தல் நடைமுறை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து அரசியல் கட்சி விளம்பரங்கள் புகைப்படங்களை அழிக்கும் பணி தீவிரம். 

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியானதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதையெடுத்து தமிழ்காத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள்,பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதியில் உள்ள சுவர்களில் வரையப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்கள், தலைவர் படங்கள் ,வால் போஸ்டர்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை நகராட்சி,மாநகராட்சி,உள்ளாட்சி,துறையினர் அகற்றி வருகின்றனர். வருவாய்த் துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அதே போன்று அரசியல் கட்சி தலைவர்கள்  சிலைகள் துணிகளை வைத்து மறைத்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : தேர்தல் நடைமுறை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து அரசியல் கட்சி விளம்பரங்கள் புகைப்படங்களை அழிக்கும் பணி தீவிரம் 

Share via