பரந்தூர் விமான நிலையம் - முதல்வருக்கு விஜய் கடிதம்

பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "விமான நிலையம் என்ற பெயரில் மட்டுமே 20 கிராமங்களுக்கு உட்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. பின், அதைச் சுற்றித் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் எனக் கட்டடங்கள் கட்டப்படுவதற்காக, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மேலும் 20 கிராமங்கள் அழிக்கப்படும். இது பரந்தூர் பகுதி மக்கள் மீது ஏவப்பட்டுள்ள நிர்வாக ரீதியான அரச பயங்கரவாதம் அல்லாமல் வேறென்ன?" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :