புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைப்பு.

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் காதல் விவகாரத்தில் கடத்தப்பட்டதாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், ஜெகன் மூர்த்தி தலைமறைவாகிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரை பிடிக்க காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன், காஞ்சிபுரம் சிபிசிஐடி காவல் ஆய்வாளர், திருவள்ளூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர், சென்னை சிபிசிஐடி போலீஸ் என நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Tags : புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைப்பு.