மீன் லோடு வேன் கவிழ்ந்து இருவர் பலி - 5 பேர் காயம்

by Staff / 14-10-2023 01:31:45pm
மீன் லோடு வேன் கவிழ்ந்து இருவர் பலி - 5 பேர் காயம்

பட்டுக்கோட்டை அருகே ஓலைக்குன்னம் சேகர், 52,. காடந்தங்குடி தங்கராசு, 60, நரசிங்கபுரம் மல்லிகா, 60, மன்னங்காடு சொக்கலிங்கம், 55, துவரங்குறிச்சியை அசோகன், 48, ஒட்டங்காடு மகன் ஆறுமுகம், 50, பரவத்துார் சக்திவேல், 49,. இவர்கள் சேதுபாவாசத்திரம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து, மதுக்கூர், துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சில்லறையாக மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள். இவர்கள் வழக்கம் போல நேற்றுமுன்தினம் காலை ஜெகதாப்பட்டினத்தில் மீன்களை வாங்கி, பொலிரோ பிக்கப் லோடு ஆட்டோவில் மீன்களை ஏற்றிக்கொண்டு பட்டுக்கோட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, சேதுபாவாசத்திரம் அருகே அம்மணிசத்திரத்தில் வரும் போது, லோடு ஆட்டோவின் சென்ட்ரல் ஆக்சிஸ் திடீரொன உடைந்து, சாலையின் வலதுபுறத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோ டிரைவரான வெட்டிக்காட்டை சேர்ந்த கணேசன் மகன் பாலசுப்பிரமணியன், ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் உட்பட எட்டு பேரும் படுகாயமடைந்தனர்.தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலென்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் தங்கராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். சேகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo