திருநெல்வேலி - மேலப்பாளையம் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள்இரயில் சேவைகளில் மாற்றங்கள்.

திருநெல்வேலி - மேலப்பாளையம் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள் காரணமாக பின்வரும் இரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் விவரம் :
திருநெல்வேலி - செங்கோட்டை மார்க்கம் :
வருகிற 23 முதல் 28 வரை
1. திருநெல்வேலியில் இருந்து காலை 7 மற்றும் மதியம் 1:50 க்கு புறப்படும் திருநெல்வேலி - செங்கோட்டை ரயில்கள் முழுவதும் ரத்து.
2. செங்கோட்டையில் இருந்து காலை 10:00 மணி, மாலை 6:00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - திருநெல்வேலி ரயில்கள் முழுவதும் ரத்து.
06030/ 06029 நெல்லை மேட்டுப்பாளையம் நெல்லை சிறப்பு ரயில்கள் 25 மற்றும் 26 ம் தேதிகளில் முழுவதும் ரத்து.
திருநெல்வேலி - செங்கோட்டை மார்க்கத்தில் பகுதியாக ரத்து செய்யப்படும் இரயில்கள்:
வருகிற 21 முதல் 28 வரை
1. செங்கோட்டையில் இருந்து மதியம் 2:30 க்கு புறப்படும் செங்கோட்டை - திருநெல்வேலி ரயில் சேரன்மகாதேவி - திருநெல்வேலி இடையே ரத்து.
2. திருநெல்வேலியில் இருந்து மாலை 6:15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் : 06657 திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் இரயில் சேரன்மகாதேவியில் இருந்து புறப்படும்.
3. வருகிற 23 முதல் 28 வரை வண்டி என் : 16791 திருநெல்வேலி - பாலக்காடு இரயில் திருநெல்வேலி - கொல்லம் இடையே ரத்து.
4. வருகிற 22 முதல் 27 வரை வண்டி எண் : 16792 பாலக்காடு - திருநெல்வேலி இரயில் கொல்லம் - திருநெல்வேலி இடையே ரத்து.
5. வருகிற 23 முதல் 27 வரை வண்டி எண் : 16845 ஈரோடு - செங்கோட்டை இரயில் வாஞ்சி மணியாச்சி - செங்கோட்டை இடையே ரத்து.
6. வருகிற 24 முதல் 28 வரை 16846 செங்கோட்டை - ஈரோடு இரயில் செங்கோட்டை - வாஞ்சி மணியாச்சி இடையே பகுதியாக ரத்து.
வழிமாற்றம் :
13) வருகிற 22,25 & 27 ஆகிய தேதிகளில் வண்டி எண் : 20683 தாம்பரம் - செங்கோட்டை அதி விரைவு இரயில் ராஜபாளையம் வழியாக செங்கோட்டை வந்து சேரும்.
14) வருகிற 23,26 & 28 ஆகிய தேதிகளில் வண்டி எண் : 20684 செங்கோட்டை - தாம்பரம் இரயில் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வழியாக தாம்பரம் செல்லாமல் ராஜபாளையம் வழியாக தாம்பரம் செல்லும்.
Tags : இரயில் சேவைகளில் மாற்றங்கள்