சீனாவில் கொரோனா பரவல் 23 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வி கேள்விக்குறி

by Staff / 23-03-2022 01:51:03pm
சீனாவில் கொரோனா பரவல் 23 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வி கேள்விக்குறி

சீனாவில் மீண்டு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவம் பயின்று வரும் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

சீனாவில் தற்போது மேலும் கொரோனா அலை  கோரமா வீசத் தொடங்கியுள்ளது பல்வேறு பகுதிகளில் மாபெரும் பூட்டு  தயாராகி வருகின்றன.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மாணவர்கள் நேரடி கல்விக்காக சீனா செல்ல முடியாத நிலை உள்ளது.

மாணவர்களின் தேவைக்கு ஏற்ப நாட்டிற்குள் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவது குறித்து தொடர்ந்து அமைதி காத்து வருகிறது.

இதனால் அங்கு மருத்துவம் பயிலும் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் நடப்பாண்டில் தங்கள் நேரடி கல்வியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo