அமித் ஷா வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

by Staff / 15-10-2022 11:02:34am
அமித் ஷா வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்குள் பாம்பு புகுந்தது பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து அடி நீளமுள்ள நீர்ப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் வியாழக்கிழமை நடந்தது.காவலர் அறை அருகே பாம்பு இருப்பதை பாதுகாப்புப் பணியாளர்கள் பார்த்தனர். உடனடியாக வனவிலங்கு எஸ்.ஓ.எஸ்.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மரப்பலகைகளுக்கு இடையே மறைந்திருந்த பாம்பை 30 நிமிட நீண்ட முயற்சிக்குப் பிறகு இரண்டு பேர் கொண்ட விலங்கு மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.பிடிபட்ட பாம்பு தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளது. "அது விரைவில் காட்டுக்குள் விடப்படும்" என்று வைல்டுலைஃப் எஸ்ஓஎஸ் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திக் சத்தியநாராயணன் தெரிவித்தார். இந்த மழைக்காலத்தில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 70 பாம்புகளை அந்த அமைப்பு பிடித்து மீட்டுள்ளதாக கார்த்திக் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo