நாகூர் துறைமுகத்திலிருந்து இரு கிராம மீனவர்களிடையே மோதல் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான பைபர் படகு வழக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

by Editor / 07-07-2022 04:17:27pm
நாகூர் துறைமுகத்திலிருந்து இரு கிராம  மீனவர்களிடையே மோதல் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான பைபர் படகு வழக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

நாகை மாவட்டத்தின் நாகூர்  துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 லட்ச ரூபாய் மதிப்பிலான பைபர் படகுகள் உள்ளிட்டவைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது .. நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் மேல பட்டினச்சேரி கீழ்  பட்டினச்சேரி  கிராம மீனவர்கள் இடையே கருத்து வேறுபாடு மற்றும் மோதல் நிலவி வருகிறது.இந்த நிலையில் கீழ்பட்டினச்சேரி சேர்ந்த  விஜி என்பவரின் பைபர் படகுகளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனை அறிந்து துறைமுகத்தில் தீ வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக வலியுறுத்தினர். இதுகுறித்து 5 பேர் மீது புகார் அளிக்கப் பட்டுள்ள நிலையில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories