காதலி கொலை... சடலத்துடன் 40 கி.மீ பயணம்
டெல்லியில் காதலியை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் பதுக்கி வைத்திருந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரில் சார்ஜ் வயரை கழுத்தில் இறுக்கி காதலி நிக்கியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட சாஹில் கெஹ்லோட் விசாரணையில் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு, காதலியின் சடலத்தை காரில் வைத்துக்கொண்டு சுமார் 40 கி.மீ. வீட்டிற்கு பயணம் செய்துள்ளார். பின்னர் சாஹல் உடலை ஃப்ரீசரில் மறைத்து வைத்தார். செவ்வாயன்று, போலீசார் அவரது சடலத்தை கண்டுபிடித்து சாஹிலை கைது செய்தனர். கொலை நடப்பதற்கு முன், அன்று நிக்கி அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
Tags :



















