அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. அரசியல் கட்சிகள் பல்வேறு வேலைகளை செய்து வருகின்ற நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் . விதிகளை மீறுபவர்கள் மீது குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags :