தங்கம் ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ. 60,880க்கும் விற்பனை
இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து தங்கம் விலை கடந்த வாரத்தில் முதல் முறையாக 60 ஆயிரம் ரூபாயை கடந்தது. கடந்த ஜனவரி 22ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.60,000 என்ற விலையைத் தாண்டியது.நேற்று (ஜன.29ஆம் தேதி) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,595க்கும் ஒரு சவரன் ரூ. 60,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று (ஜன.30ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,610க்கும் ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ. 60,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags : தங்கம் ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ. 60,880க்கும் விற்பனை