போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை அமோகம்

by Staff / 10-09-2023 03:56:58pm
போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை அமோகம்

கோவை மாவட்டம் கரும்பு கடை அடுத்த சேரன் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று, தகவல் கிடைத்தது,இதனை தொடர்ந்து
குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் சட்ட விரோதமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக 26 வயதான பாசில் என்கிற ஃபாசில் ரகுமான் என்பவரை கைது செய்துஅவரிடமிருந்து 120 போதை மாத்திரைகளையும், 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றதாக இன்று குனியமுத்தூர் காவல்துறையினர் தங்களது அறிக்கையில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories

Logo