by Staff /
10-05-2023
11:51:00am
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், 5 பேரை கைது செய்தனர்.இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையோரின் வீடுகளில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், சென்னையை சேர்ந்த அப்துல் ரசாக், மதுரையை சேர்ந்த முகமது யூசப், முகமது அப்பாஸ், திண்டுக்கல்லை சேர்ந்த கைசர் மற்றும் தேனியை சேர்ந்த சாதிக் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதில், தஞ்சாவூரை சேர்ந்த முகமது அசாப் என்பவர் சட்டவிரோதமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு அவரது கருவிழி ரேகை பொருந்தாததை அடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் அவரை மடக்கி பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக முகமதுவிடம் விசாரணை நடத்தினர். இதே போன்று எஞ்சியவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிரானோர் மீது நடவடிக்கை எடுக்க சதித்திட்டம் தீட்டியதால் 5 பேர் கைது செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே இவ்வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags :
Share via