மும்பையில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

by Admin / 17-01-2022 01:15:06pm
 மும்பையில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

மும்பை அருகே பிவாண்டியில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் நேற்று இரவு தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன 

ஆயத்த ஆடை தொழில்மயமான பிவாண்டியில்  நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன 

விடுமுறை நாளான நேற்று இரவு ஒரு தொழிற்சாலையில் தீ பற்றி எரிய தொடங்கியது ஆடைகள் துணிகள் கிடங்கில் இருந்த பொருட்கள் இயந்திரங்கள் ஆகியன தீப்பிடித்து எரிந்தன 

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர் விடுமுறை நாளில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது
 

 

Tags :

Share via

More stories