சிங்காரச் சென்னை இருக்கட்டும் - மழைநீர் தேங்காத மாநகரமாக மாற்றுங்கள்

by Staff / 25-11-2023 02:12:14pm
சிங்காரச் சென்னை இருக்கட்டும் - மழைநீர் தேங்காத மாநகரமாக மாற்றுங்கள்

சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவதைவிட, மழைநீர் தேங்காத மாநிலமாக மாற்றுங்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னையில் சில சமயங்களில் மழை கொட்டி தீர்த்துவிடுகிறது. இன்று காலையும் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்" சென்னையில் இன்று அதிகாலை பெய்த மழையால் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்பட பல பகுதியில் தண்ணீர் தேங்கியதுடன் மக்களும் கடும் சிரமங்களுக்கு ஆளாகினர். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை உடனே மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசை ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை மாநகரை சிங்காரச் சென்னையாக மாற்றுவதைவிட, மழைநீர் தேங்காத மாநகரமாக மாற்றுவதே அவசியமானது என வலியுறுத்தினார்.

 

Tags :

Share via

More stories

Logo