கோவை புறநகர் பகுதியில் கடும் பனிப்பொழிவு

by Editor / 23-11-2022 08:11:30am
கோவை புறநகர் பகுதியில் கடும் பனிப்பொழிவு

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இன்று அதிகாலை நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் சென்றனர்.
 வடகிழக்கு பருவமழையால் கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. இரவு மற்றும் காலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான நீலாம்பூர், தென்னம்பாளையம், கருமத்தம்பட்டி, கணியூர் ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

இதன் காரணமாக சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு சென்றனர். மேலும் கிராமப்புற சாலைகளிலும்
பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

 

Tags : கோவையில் கடும் பனிப்பொழிவு

Share via

More stories

Logo