சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (நவ.02) இரவு 7 மணி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Tags : சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.



















