9 வயது சிறுமி கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை.

by Staff / 02-11-2025 05:23:26pm
 9 வயது சிறுமி கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை.

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள பிரபலமான நீர்ஜா மோடி பள்ளியில் படிக்கும் அமைரா என்ற 9 வயது சிறுமி கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் நேற்று நவம்பர் 1ஆம் தேதி நடந்துள்ளது. அங்குள்ள மன்சரோவர் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் பிற்பகல் 1:30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சுமார் 10 வினாடிகள் ஓடும் சிசிடிவி காட்சிகளில், அமய்ரா முதலில் தடுப்புச்சுவர் மீது ஏறுகிறார். ஓரிரு நொடிகள் அங்கு அமர்ந்திருக்கும் சிறுமி பிறகு கீழே குதிப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. கீழே சில செடிகள் இருந்த நிலையில், அதில் சிறுமி விழுந்திருக்கிறார். இது தொடர்பாக வெளியான சிசிடிவி வீடியோவில், சிறுமி முதலில் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் ஏறி திடீரென கீழே குதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : 9 வயது சிறுமி கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை.

Share via