அரசுப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து 5 மாணவர்கள் காயம்

by Editor / 16-07-2025 05:03:42pm
அரசுப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து 5 மாணவர்கள் காயம்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வகுப்பறை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். இன்று (ஜூலை 16) ஆசிரியர் பாடம் எடுத்தபோது நடந்த இச்சம்பவத்தில் 6ஆம் வகுப்பு மாணவர்களான ரஷித், கோபிகா, தேன்மொழி, கோகுல், வைசாலி உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் நடந்த வகுப்பறை கட்டிடம் ரூ.33 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via