ஆஸ்திரேலிய தூதர்களுடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு
ஆஸ்திரேலியாவில் இருந்து கம்பளி, பருத்தி துணிகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர்கள் சாரா கிர்லே, ஆன்ட்ரே காலிஸ்டர் ஆகியோர் கோவை வந்தனர். அவர்களை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், துணை செயலாளர் செந்தில்குமார், நிர்வாக செயலாளர் சக்திவேல் ஆகியோர் சந்தித்து பேசினர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து கம்பளி, பருத்தி துணிகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தநிலையில் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக வரியில்லாத ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர்.
மேலும் பின்னலாடை ஏற்றுமதி தொழில் சார்ந்த கோரிக்கைகளை ஆஸ்திரேலிய தூதர்களிடம் விளக்கியதாக ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
Tags :