ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தம் மத்திய அமைச்சர்

by Admin / 17-03-2022 03:59:35pm
ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தம் மத்திய அமைச்சர்

கொரோனவால்  நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை மீண்டும் வழங்கும் திட்டம் இல்லை என ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கொரோனவால் இழந்த ரயில்வே துறையின் வருவாய் ஈடுகட்ட மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்ட சலுகைகளை தொடரும் எண்ணம் தற்போது இல்லை என அஸ்வின் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அஸ்வின்  ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும்53 சலுகைகளில் நோயாளிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் 15 சதவீத சலுகை களை தவிர்த்து மற்ற அனைத்தையும் நிறுத்துவதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories