செங்கல்பட்டு இரட்டைக் கொலை சம்பவம்-2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.

by Writer / 07-01-2022 10:01:24am
செங்கல்பட்டு இரட்டைக் கொலை சம்பவம்-2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.

செங்கல்பட்டு நகரில் நள்ளிரவில் நிகழ்ந்த இரட்டைப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரில் 2 பேர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழப்பு. காவல்துறையினர் ரவுடிகளைப் பிடிக்க முயன்ற போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்ப முயன்றதால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கல்பட்டில் நேற்று இரவு கார்த்திக் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டும், மகேஷை அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை வழக்கில் மறைமலை நகரில் பதுங்கியிருந்த அஜய் என்பவனை 2 கைகள் சிதைந்த நிலையில் தனிப்படை போலீஸ் கைது செய்த நிலையில், மாமண்டூர் அருகே தினேஷ், மொய்தீன் ஆகிய இரண்டு ரவுடிகளையும் காவல்துறையினர் பிடிக்க முயன்றனர்.


அப்போது, காவல்துறையினர் மீது ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.. இதில் இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், போலீசார் தற்பாதுகாப்பு கருதி ரவுடிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 அதில், தினேஷ்,மொய்தீன் ஆகியோர் 2 பேர் மேல் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர்.அவர்களின் உடல்கள் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த இருவரின் மீதும் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்த இரட்டைக்கொலையும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த என்கவுண்டரும் பொதுமக்களை பதற்றமடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது..

செங்கல்பட்டு இரட்டைக் கொலை சம்பவம்-2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.
 

Tags :

Share via
Logo