நிஃபா தொற்று பரவல்.. பெண் கவலைக்கிடம்

கேரளாவின் பாலக்காடு அருகே மன்னார்க்காட்டைச் சேர்ந்த 38 வயது பெண் நிஃபா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். மேலும் தொற்று பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மொத்தம் 173 நபர்களுக்கு அறிகுறிகள் இருப்பதால் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பாலக்காடு மருத்துவக் கல்லூரியில் 12 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Tags :