தேர்தல் பிரச்சார கூட்டத்தில் டாக்டர் .ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்தார். தற்பொழுது அவரது உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை
சேலம் பள்ளப்பட்டி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேட்பாளர் அருளை ஆதரித்து பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கும்போது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்தார். கடும் வெயில் மற்றும் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட சோர்வினால் அவர் மயக்கம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது .அடுத்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்பு அவர் சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டாக்டர் ராமதாஸின் உடல்நிலை குறித்து தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார்.
Tags :


















.jpg)
