நைஜீரியாவின்ஜில்லி வாராந்திர சந்தை மீது நடத்தப்பட்ட விமானப்படைத் தாக்குதலில், 100- க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் யோபே மற்றும் போர்னோ மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஜில்லி வாராந்திர சந்தை மீது நடத்தப்பட்ட விமானப்படைத் தாக்குதலில், 100- க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஜிகாதி தீவிரவாதக் குழுவான போகோ ஹராம் இலக்குகளைக் குறிவைத்து நைஜீரிய விமானப்படைமேற்கொண்ட நடவடிக்கையின் போது தவறுதலாக இந்தச் சந்தை தாக்கப்பட்டது
யோபே மாநில அரசு இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. ஆனால் பலியானவர்களின் துல்லியமான எண்ணிக்கையை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
நைஜீரிய விமானப்படை, தாங்கள் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தையே த்தாக்கியதாகக் கூறினாலும் தவறுதலாகப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்றும் காயமடைந்த பலர் கெயிடாம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடக்கும் நீண்ட காலப் போரில், இத்தகைய தவறுதலான வான்வழித் தாக்குதல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக உள்ளன.
Tags :


















.jpg)
