ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கட்டடம் கட்ட ரூ.65 கோடி ஒதுக்க உத்தரவு

by Staff / 16-05-2024 01:41:20pm
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கட்டடம் கட்ட ரூ.65 கோடி ஒதுக்க உத்தரவு

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கட்டடம் கட்ட ரூ.65 கோடி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையின் நரம்பியல் துறைக்கு 1.12 லட்சம் சதுர அடியில் நான்கு தளங்களுடன் மருத்துவமனை கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் 220 படுக்கை வசதிகளுடன் உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்படும். விரைவில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்த்துறைக்கு ரூ.65 கோடி ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via