டிடிஎப் வாசனுக்கு மதுரை போலீஸ் சம்மன்

by Staff / 31-05-2024 12:34:23pm
டிடிஎப் வாசனுக்கு மதுரை போலீஸ் சம்மன்

யுடியுபர் டிடிஎப் வாசனுக்கு மதுரை அண்ணாநகர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மதுரை வண்டியுர் டோல்கேட் அருகே செல்போனில் பேசியபடி கார் ஓட்டிச் சென்ற புகாரில் நேற்று முன்தினம் (மே 29) டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்திருந்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நிபந்தனையுடன் நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற ஜுன் 3ஆம் தேதி அவரது மொபைல் போனை ஒப்படைக்க வேண்டும் என மதுரை அண்ணாநகர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அஜாக்கிரதையான வாகனம் ஓட்டி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories