மனைவியை கொன்ற கணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

by Staff / 03-03-2025 01:22:06pm
மனைவியை கொன்ற கணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சங்கீதா. இவரது கணவர் கிருஷ்ணகுமார், சங்கீதாவை வீட்டில் வைத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பாலக்காடு அருகேவுள்ள கிராமத்திற்குச் சென்ற கிருஷ்ணகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சூலூரில் உள்ள வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக இருப்பதால், மனைவியை எவ்வாறு கொலை செய்திருப்பார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via