சாலையில் பின் நோக்கி வந்த கார் குழந்தை மீது ஏறி இறங்கி விபத்து

by Staff / 11-06-2022 02:45:06pm
சாலையில் பின் நோக்கி வந்த கார் குழந்தை மீது ஏறி இறங்கி விபத்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சாலையில் பின் நோக்கி வந்த கார் ஒரு குழந்தையின் மீது ஏறி இறங்கியதில் அந்த குழந்தை படுகாயமடைந்து விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பட்டணம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் 2 வயது மகன் தரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காரை திருப்புவதற்காக ஓட்டுநர் காரை பின்னோக்கிய போது குழந்தை மீது மோதியது. இதில் குழந்தை கீழே விழுந்ததை கவனிக்காத ஓட்டுனர் மீண்டும் காரை இயக்கியதால் குழந்தை மீது இரண்டு முறை கார்  ஏறி இறங்கியது கூச்சல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories