இன்டர்நெட் இல்லாமல் UPI பரிவர்த்தனைகளை செய்வது எப்படி?
பெட்டிகடைகள் முதல் பெரிய பெரிய பல்பொருள் அங்காடிகள் வரை அனைத்திலும், இன்று Google Pay, PhonePe, Paytm மற்றும் NPCI இன் BHIM போன்ற பரிவர்த்தனை சேவைகளை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பல நேரங்களில் இன்டர்நெட் சரியாக கிடைக்காத சூழ்நிலைகளில் UPI பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாமல் போகிறது. அப்போது, இன்டர்நெட் இல்லாமல் UPI பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழும், அப்படி இனி உங்களிடம் யாராவது கேட்டால், ஆம் முடியும் என்று உறுதியாக சொல்லலாம்.
இன்டர்நெட் இல்லாமல் எப்படிப் UPI பரிவர்த்தனையை மேற்கொள்ளவது என்று பார்க்கலாம்.
1- தங்களின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள எண்ணில் இருந்து, *99#-ஐ டயல் செய்ய வேண்டும்.
2- பணம் அனுப்புதல், பணத்தைக் கோருதல், இருப்பைச் சரிபார்த்தல், சுயவிவரம், நிலுவையில் உள்ள கோரிக்கைகள், பரிவர்த்தனைகள் மற்றும் UPI பின் உள்ளிட்ட சேவைகளைக் கொண்ட மெனு திரையில் தெரியும்.
3- உதாரணத்திற்கு பணம் அனுப்ப விரும்பினால், 1-ஐ உள்ளிட்டு, அனுப்பு என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
4- அதன் பின் நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் UPI ஐடி அல்லது தொலைபேசி எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும்.
5- இறுதியாக உங்கள் UPI பின்னுடன் நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிட வேண்டும்.
வெற்றிகரமான பரிவர்த்தனைக்குப் பிறகு, தங்களிடமிருந்து அதிகபட்சமாக, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.0.50 எடுக்கப்படும். இந்த சேவையின் அதிகபட்ச வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
*99# சேவையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது தங்களுக்கு தெரியுமா?
1- சாதாரனபோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் என இரண்டிற்கும் இந்த சேவையைப் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
2- மெனுவை பயன்படுத்துவது மிகவும் எளிதானதாக உருவாக்கப்பட்டுள்ளது.
3- இந்த சேவைக்கு இன்டர்நெட் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4- இந்த சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில்உருவாக்கப்பட்டுள்ளது.
5- *99# என்ற பொதுவான குறியீட்டின் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது.
Tags :