ஜெயராமுடன் பார்வதி சபரிமலையில் தரிசனம்

நடிகர் ஜெயராமுடன் அவரது மனைவி பார்வதி முதன்முறையாக சபரிமலை கோயிலுக்குச் சென்றார். ஜெயராமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தம்பதியினர் கருப்பு உடை அணிந்து, மாலை அணிவித்து, சன்னிதானத்தில் இருந்து பயபக்தியுடன் பிரார்த்தனை செய்யும் படங்களை வெளியிட்டுள்ளனர். ஜெயராமும் பார்வதியும் சேர்ந்து சபரிமலை செல்வது இதுவே முதல் முறையாகும். பார்வதிக்கு தற்போது 53 வயதாகிறது. 1992ஆம் ஆண்டு ஜெயராமுடன் திருமணம் செய்து கொண்ட பிறகு பார்வதி நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார். சபரிமலைக்கு 10 வயதுக்கு மேல், 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் செல்ல முடியாது.
Tags :