அரசு சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்திய உணவகத்திற்கு ‘சீல்.உரிமையாளர் கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி சாலையில் தமிழக அரசின் அங்கன்வாடி முட்டைகளை பயன்படுத்திய ரத்னா ஹோட்டலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வட்டாட்சியர் மோகன் முன்னிலையில் சீல் வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ரத்னா ஓட்டல் உரிமையாளர் ரத்தினம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர் அப்போது அவர் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் வசந்த மலர் என்பவரிடம் இருந்து முட்டைகளை வாங்கிதாக வாக்குமூலம் அளித்துள்ளார் இதை தொடர்ந்து வசந்த மலரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : அரசு சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்திய உணவகத்திற்கு ‘சீல்.உரிமையாளர் கைது.