காதலியை 49 முறை குத்தி கொன்ற இளைஞர்

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியை 49 முறை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஜகநாத் கோடா என்ற அந்த இளைஞர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த பெண் மறுத்து வரவே, அவரை குஜராத்திற்கு மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற இளைஞர், 49 முறை குத்தி கொலை செய்துவிட்டு உடலை யாருக்கும் தெரியாத இடத்தில் தூக்கி எறிந்தார். இதையடுத்து சிசிடிவி உதவியுடன் குற்றவாளியை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags :