முருகன் கோவில் ரோப்கார் சேவை இன்று தொடக்கம்...

by Staff / 30-11-2023 11:19:14am
முருகன் கோவில் ரோப்கார் சேவை இன்று தொடக்கம்...

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாளதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக படிவழிப்பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை ஆகியவை உள்ளன. இந்நிலையில் ரோப்கார் சேவை வருடத்திற்கு 45 நாட்களும், மாதத்திற்கு 1 நாளும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது. இதன்படி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நேற்று ஒருநாள் நிறுத்தப்பட்டது. பழுதுகள் சரிசெய்யப்பட்டு, ரோப்கார் பெட்டிகள் பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு இன்று மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo