தவெக தொண்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

த.வெ.க சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் பேனர் வைக்கக் கூடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடிய வகையில் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், கட்சி கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், அரசியல் பிரச்சாரங்களில் மரியாதை மற்றும் பொறுப்புடன் நடப்பது கட்சி கொள்கையெனவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Tags :