முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கும்முடிபூண்டி கி. வேணு இன்று இரவில் காலமானார்

by Admin / 20-10-2023 11:52:58pm
 முன்னாள் சட்டப்பேரவை  உறுப்பினர்  கும்முடிபூண்டி கி. வேணு இன்று இரவில் காலமானார்

கும்முடிபூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான கும்முடிபூண்டி பண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கி வேணு இன்று இரவில் காலமானார் .கும்முடிபூண்டி சட்டப்பேரவை தொகுதியில் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். 1975 மிசா காலத்தில் கைது செய்யப்பட்டு முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் ஆன கலைஞர் மு கருணாநிதியுடன் ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தவர் அண்மையில் திமுக தலைமை இவருக்கு கலைஞர் விருதை வழங்கி கௌரவித்தது.குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via