விபத்தில் உயிரிழந்த காவலருக்கு அரசு மரியாதை

விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து காவலருக்கு அரசு மரியாதை. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூர்சம்ஹார விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த தெற்குவாசல் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன் அவர்கள் மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டியில் நடந்த அவரின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் IPS. , மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) குமார். மேலூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களும் நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
Tags :