காதல் திருமணம்.. இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே 20 வயது இளைஞரை, ஒரு கும்பல் முகத்தை சிதைத்து கொலை செய்தது. கொத்தனார் வேலை செய்துவந்த சந்துரு என்பவர், நேற்றிரவு (பிப்.,6) கூலி வாங்க சென்றபோது இந்த கொலை நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சந்துரு குடும்பத்தினர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துள்ளார். ஆனால், சில தினங்களிலே அவரது மனைவி சந்துருவை பிரிந்துள்ளார். இதன் காரணமாக இந்த கொலை அரங்கேறியதா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :