யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி

by Admin / 30-12-2021 01:06:00pm
யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி

 

யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத்துறை ஆய்வு செய்வு செய்து,அறிக்கை வெளியிட்டுள்ளது.அதன்படி நகைக்கடன் தள்ளுபடிக்கான தகுதியுடையோர் பட்டியலில் யார்யாருக்கு  கடன் தள்ளுபடி; நகைக்கடன் பெற்ற 48லட்சத்து84ஆயிரத்து726பேரில் 35 லட்சத்து37 ஆயிரத்து693பேருக்கு நகைக்கடன் கிடையாது. 2021ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவருக்குக்கிடையாது. நகைக்கடன் முழுமையாகச் செலுத்தியவருக்குக் கிடையாது. 40 கிராமிற்கு  அதிகமாக ஒரு கிராம் கூட இருந்தாலும் தள்ளுபடி கிடையாது. அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களதுகுடும்பத்தினர் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்திருந்தால் தள்ளுபடி கிடையாது. கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்களுக்குக்கிடையாது. ஆதார்அட்டை எண்ணை தவறாக வழங்கியவர்.குடும்ப அட்டை வழங்காதவர்,வெள்ளை அட்டை உடையவர்களளுக்கும் தள்ளுபடி கிடையாது. பொங்களுக்கு முன்பு அரசு விழாவில் 25விழுக்காட்டினருக்கு நகைக்கடன்தள்ளுபடி வழங்கப்படும்.என்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via