இம் மாநாடு அரசியலுக்காகவோ- தேர்தலுக்காகவோ இல்லை.- தொல் .திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இம்மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் தலைமையில் நடந்தது.. தமிழக முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள வி.சி.க மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். இம் மாநாட்டில் மது மற்றும் போதை ஒழிப்பு 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் பேசும் பொழுது, இம் மாநாடு அரசியலுக்காகவோ- தேர்தலுக்காகவோ இல்லை. மது வேண்டாம் எனக் கூறும் அனைவருக்காகவும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற உற்ற கொள்கையோடு மாநாடு நடத்தப்பட்டு இருப்பதாகவும் புத்தரின் முழக்கம் கூட மதுவுக்கு எதிரானது தான் என்றும் மதுக்கடைகளை நாளை மூடுவதாக இருந்தால் அன்றே மது பாட்டில்களை இரண்டு மடங்காக வாங்கி வைக்கிறார்கள் என்றும் வருடத்தில் இந்தியா முழுவதும் மதுக்கடைகள் 7 அல்லது 8 நாட்கள் மட்டுமே மூடப்படுவதாகவும் மது ஒழிப்பில் திமுகவுக்கும் உடன்பாடு இருக்கிறது என்றும் நடைமுறையில் சிக்கல் இருப்பதாக திமுக நினைக்கிறது என்றும் மது ஆலைகள் வைத்திருப்பவர்கள் தி.மு.கவினர் அவர்கள் எப்படி மாநாட்டுக்கு வருவார்கள் என்றும் கேட்கின்றனர் .விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது நம்பிக்கை வைத்து மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பாக பங்கேற்று உள்ளனர் என்று அவர் உரை நிகழ்த்தினார்.
Tags :